ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும்
அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு
பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்....
யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும்
நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு
வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும்.
குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
* பப்பாளி பழத்தை
அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
* பப்பாளிக் காயை கூட்டாக
செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை
சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
* பப்பாளிப் பழத்தை
தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
* நன்கு பழுத்த பழத்தை
கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால்
கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
* பப்பாளி விதைகளை
அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
* பப்பாளிக் காயின் பாலை
வாய்ப்புண், புண்கள்
மேல் பூச புண்கள் ஆறும்.
* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து
சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
* பப்பாளிப் பாலை
குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
* பப்பாளி இலைகளை அரைத்து
கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
* பப்பாளி இலைகளை
பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
* பப்பாளி விதைகளை
அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
No comments:
Post a Comment