மறத்தமிழர் சேனை கொள்கை விளக்கம்
கொஞ்சம் நில்லுங்கள் !
எங்களின் வணக்கம் உங்களுக்கு என்றும் உண்டு. அதே சமயம் நீங்கள் இந்த கட்டுரையை முழுமையாக படித்தாக வேண்டும். எது நம் அரசியல் ? உங்களால் இன்னும் எத்தனைநாட்கள் இப்படியே, இதே நிலையிலேயே இருந்துவிட முடியும். வரலாற்றுகால பெரும்புகழை சிதைத்து உங்களை ஓரம்கட்டிவிட்டு வேறொரு முகம் ஆளுமை செய்வதையாவது அறிந்து உள்ளீர்களா?
வையம் ஆளப்பிறந்த மறக்குடியே, ஒன்றாக வாழ்வதே உயர்வென்று தெரியாமல், சாதி ஓர்மையின்றி நன்றாக வாழ்வதே நலமென்று சிதறுண்டீர்களே! துயரத்தில் துவல்கின்றீர்களே! வாழப்பிறந்த முதுகுடியே! நீங்கள் என்றென்றும் வாழுங்கள்.
எவர் ஆண்டால் என்ன? எவர் மாண்டால் என்ன? உங்களுக்கு உங்கள் வாழ்வுதான் பெரிது; அரை சாண் வயிறுதான் பெரிது. அதை வளர்க்கும் சோறுதான் பெரிது. உங்களின் மானம் காற்றில் பறந்தால் என்ன? மரியாதை சேற்றில் அமிழ்ந்தால் என்ன? சோற்றுச் சுவையுணர்ந்து துப்பின்றி வாழுங்கள்!
குல உணர்வு வேண்டாம்! சாதிப்பற்றும் வேண்டாம். குடிப் பெருமையும் உரிமையும் வேண்டாம். ஆட்சியும் மாட்சியும் வேண்டவே வேண்டாம்! ஒற்றுமை அறவே வேண்டாம்! ஆளும் பகைவரின் அடிகளை வருடினால் அட்டியின்றிக்கிடைக்கும் கட்டிச்சோறு போதும். வாழ்வென்பதென்ன? அதைப்பற்றி உங்களுக்கேன் கவலை! ஏதோ பிறந்தீர்; இருக்கின்றீர்; இறப்பீர். மறக்குடியின் வரலாறும், மறத்தமிழர் வினைப்பாடும் ஒரு சோற்றுப் பொருக்குக்கு ஈடாகுமா? உண்டு களித்து வாழுங்கள், நாங்கள் போராடுகின்றோம்.
ஆனால் ஒன்றைமட்டும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களை உருவாக்க துடிக்கும் எங்களை எருவாக்கி நீங்கள் செழியுங்கள். எங்களுக்கு அதுவே நிறைவு. அதே நேரத்தில் உங்களை கருவாக்கி ஒரு நாடோடி இனமும், ஊடாடி இனமும் கொழிக்கின்றனவே அதைத்தான் எங்களால் பொறுக்க முடியவில்லை.
எங்களின் தியாகமும், ஏமாளித்தனமும், ஓயா உழைப்பும் உங்களின் வழியாக மூன்றாம் சாதிகளுக்கு, அதுவும் நம் பகை சாதிகளுக்கு பயன்படுவதைத்தான் எங்களால் ஏற்க முடியவில்லை.
"தலைகுணியோம் தறுகண்மையுடன் தோளை உயர்த்துவோம்
அடிபணியோம் ஆண்மைத்திமிரோடு மீசை முறுக்குவோம்
மண்டியிடோம் மானம்பெரிதென்றே மார்தட்டுவோம்"
இது மறத்தமிழர் சேனையின் மானமறவர்களின் அரசியல் உரிமைப்போர் முழக்கம். உங்கள் செவிகளில் நுழைந்தால் என்ன? நுழையாவிட்டால் என்ன? எப்படியும் வாழப்பிறந்த நீங்கள் வாழுங்கள்! இப்படியே சாகப் பிறந்த நாங்கள் களம் காணுகின்றோம்.
No comments:
Post a Comment