Showing posts with label முளைக்கட்டிய தானியங்கள். Show all posts
Showing posts with label முளைக்கட்டிய தானியங்கள். Show all posts

Friday, June 3, 2016

முளைக்கட்டிய பயறு



பச்சை பயறு புரோட்டின் சத்து மிகுந்தது. அதை அப்படியே உபயோகிப்பதை விட, முளைக்கட்டி உபயோகித்தால் அதிக பலன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை கிடையாது. எளிதில் சீரணமும் ஆகும்.

ஒரு கப் பச்சை பயிறை தண்ணீரில் குறைந்தது 12 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி களைந்து எடுத்து, ஒரு மெல்லிய வெள்ளைத்துணியில் போட்டு, சிறு மூட்டை போல் முடிந்து, சற்று உயரமான இடத்தில் கட்டி மீண்டும் ஒரு 12 மணி நேரம் தொங்க விடவும். பின்னர் மூட்டையை அவிழ்த்துப் பார்த்தால் பயறு நன்றாக முளை விட்டிருக்கும். (குளிர் பிரதேசங்களில், பயறு முளை விட அதிக நேரமாகும். அந்த இடங்களில் வசிப்பவர்கள், மூடடையின் மேல் அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து விட்டு, மேலும் 10 அல்லது 12 மணி நேரம் வைத்திருக்கவும். அல்லது அந்த மூட்டையை, ஒரு பாத்திரத்திக்குள் வைத்து, மூடாமல் வைத்திருந்தாலும், முளை விடும்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாக, சாலட், பச்சடி ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், இட்லி தட்டில் போட்டு, ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து உபயோகிக்கலாம். மைக்ரோ அவனில் வேக வைத்து எடுக்கலாம்.

வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றில் சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்த உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

முளைக்கட்டிய தானியங்கள்

முளைக்கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைப்பதையே முறை கட்டுதல் என்கிறோம். 

பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளைக்கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது.