Showing posts with label மூலிகை மருத்துவம். Show all posts
Showing posts with label மூலிகை மருத்துவம். Show all posts

Friday, June 3, 2016

தூதுவளை

தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு (கசப்பு), கார்ப்பு சுவையுடையது. தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை நீங்கும்.

இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.

இலையை அரைத்து அத்துடன் சம அளவு பசு வெண்ணெய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய்த் தோல் சேர்த்துக் கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யைத் தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட ஷயரோகம் குணமாகும்.

Thursday, June 2, 2016

வெற்றிலை

1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.

2. தாவரப் பெயர் -: PIPER BETEL.
3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.
4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.

5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

நிலக்கடலை பயன்கள்

வேர்கடலை.

மூலிகையின் பெயர் -: வேர்கடலை.

தாவரவியல் பெயர் -: ARACHIS HYPOGAEA.

தாவரவியல் குடும்பம் -: FABACEAE

உபயோகமுள்ள பாகங்கள் -: சமூலம்.

வேறு பெயர்கள் -: மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை, நிலக்கடலை, கச்சான் போன்றவை.

ஆங்கிலப் பெயர்கள் -: PEANUT, GROUNDNUT  என்பன.

வளரியல்பு -: வேர்கடலை எண்ணெய் வித்தெடுக்க விவசாயமாகப் பயிர் செய்யப்படுகிறது. இதன் தாயகம்  தென் அமரிக்கா. பின் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் பரவிற்று. பல முறை டிரேக்டரால் நிலத்தை ஓட்டி மண்ணை மிருதுவாக இருக்கும் படி செய்து உரமிடவேண்டியது  மிக நன்று.  இதில் பல இரகங்கள் உள்ளன. இந்தியாவில் சிகப்பு ரகம், பட்டாணி ரகம், கொடிக்காய் ரகம் என உள்ளன. இதை மானாவாரியாகவும் தண்ணீர்பாச்சியும் பயிர் செய்வார்கள். முன்பு போல் இதை விதைப்பதற்கு ஏர் மூலிம் சால் விட்டு விதைப்பதில்லை .தற்போது விதைப்பதற்கு டிரேக்டர் மூலம் கருவிகளின் கொள்ளளவில் விதை விதைக்கிறார்கள். கழை எடுப்பதும் யந்திரங்கள் மூலம் செய்யப்படுகிறது. வேர்கடலைச்செடி 30  - 50 செண்டிமீட்டர் உயரம் வளரும். இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும் அது 1 - 7 செண்டி மீட்டர் அகலம் கொண்டிருக்கும்  பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மகரந்தச் சேர்க்கையின் போது விழுதுகள் பூமிக்குள் சென்று பிஞ்சு விட்டு காயாக மாறும். காய்  3 - 7 செ.மீ. நீளமும் அதனுள் 3 -4 விதைகள் இருக்கும். மணல் பாங்கான இடங்களில் வளரும் நிலக்கடலை கொடிக் கடலை என்பர். அது நான்கு மாத த்தில் முற்றி விடும். அதை வெட்டித்தான் பிறித்தெடுப்பார்கள். மற்ற குத்துச் செடிகள் நூறு நாட்களில் கூட முற்றி விடும். அதைப் பறிப்பது எழிது. செடியைக் காய வைத்து மாட்டுத் தீவனமாகப் பயன் படுத்துவார்கள் இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. விதையிலிருந்து தான் எண்ணெய் எடுத்துப் பயன் படுத்ததுகிறார்கள். எண்ணெய் எடுத்த பின் கடலைப்பிண்ணாக்கு மீதமாகும். அது கால் நடைகளுக்கு உணவாகும்.

வேலிப்பருத்தி

வேலிப்பருத்தி - DAEMIA EXTENSA


1) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.

2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.

3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE

4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.