உலகப்புகழ் பெற்ற போர்
மரபினர்களில் முதன்மையானவர்கள் மறவர்கள் ஆவர். ‘போரெனில் புகழும் புனைகழல் மறவர்’
கூட்டமென்று புறநானூறு பாடியது. தனக்குதானே தந்தலை கொய்து மன்னவர் மண்காக்க
உயிரைக் கொடையாக தந்து ‘நடுகல்’
ஆகிப்போன வீரமறவர்கள் ஏராளம். மறத்தமிழர் சேனை வந்தால் மண் சிவக்கும், பகைவர் குருதி தெறிக்கும்; ‘சென்ற
இடமெல்லாம் செருக்களம் அமைத்து’ வெற்றியை மட்டுமே வென்ற
இனமாகிப் போன மறவர்களில் ஒரு பிரிவினரான செம்பிய நாட்டு மறவர்கள் அரசாண்ட சீமையாம்
‘பெரிய மறவர் நாட்டின் தலைநகராக’
முதலில் விரையாதகண்டன் என்கிற ஊரும், பின்பு புகழுர் என்கிற
இன்றைய போகலூர் கிராமமும் இருந்து வந்திருக்கிறது.
கி.பி.1678 ஆம் ஆண்டு
முதல் 1710 வரை அரசாண்ட ஏழாவது மன்னராகிய கிழவன் சேதுபதி என்று வரலாறு போற்றுகிற
இரகுநாத சேதுபதி தன்னுடைய தலைநகரை இராமநாதபுரத்திற்கு மாற்றி பாண்டியர்கள்
காலத்திலே கட்டப்பட்டு சிதைவடைந்திருந்த மண்கோட்டையை அகற்றிவிட்டு, செவ்வக வடிவில் பலமான
கற்கோட்டையாக அரண்மனையை எழுப்பியிருக்கிறார்.
