சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது. உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர்.
Showing posts with label இயற்கை உணவு. Show all posts
Showing posts with label இயற்கை உணவு. Show all posts
Friday, June 3, 2016
உணவோடு ஒரு பிடி கீரை - நலம் காப்போம்
“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள். இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம்.
கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன. உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.
கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன. உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.
பாரம்பரிய தானிய உணவு
‘அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே! உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப் பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது”
– நம்மாழ்வார்.
நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசியை போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றன.
ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவிட்டன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான் இந்த நிலை. விவசாயிகள், பணப் பயிரை விவசாயம் செய்வதால், நமது பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன. ஆதித் தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்திருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறையினர் கேப்பைக்கூழ் உண்பதை கைவிடத்தொடங்கி அரிசி முதன்மையாக்கப்பட்டது.
– நம்மாழ்வார்.
நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசியை போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றன.
ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவிட்டன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான் இந்த நிலை. விவசாயிகள், பணப் பயிரை விவசாயம் செய்வதால், நமது பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன. ஆதித் தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்திருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறையினர் கேப்பைக்கூழ் உண்பதை கைவிடத்தொடங்கி அரிசி முதன்மையாக்கப்பட்டது.
Thursday, June 2, 2016
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை
சாறு மற்றும் சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை, அனைவராலும் விரும்பி
உண்ணப்படுகிறது. எலுமிச்சை குறைந்த ஆற்றல் வழங்கும் கனியாகும். 100 கிராம் எலுமிச்சையில் 29 கலோரி ஆற்றல் உடலுக்கு
கிடைக்கிறது. ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது. பூரிதமாகாத கொழுப்பு மற்றும்
கொலஸ்டிரால் எலுமிச்சையில் கிடையாது. எளிதில் ஜீரணமாகும். நார்ப்பொருட்கள்
நிறைந்துள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காதது இதன் சிறப்பு.
சிட்ரஸ் அமிலம் நிறைந்தது எலுமிச்சை. இதன் பழச்சாற்றில் 8 சதவீதம்
அளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. இது நோய் எதிர்ப்புத் தன்மையை வழங்கும்.
ஜீரணத்திற்கு உதவும். சிறுநீரக கற்களை கரைப்பதிலும் செயலாற்றுவதாக
கண்டறியப்பட்டுள்ளது. எலுமிச்சையில் அஸ்கார்பிக் அமிலமும் (வைட்ட மின்-சி)
மிகுதியாக உள்ளது. திரவ நிலையில் இருக்கும் சிறந்த நோய் எதிர்ப்பொருள் இதுவாகும்.
எப்படி சாப்பிடலாம்
எலுமிச்சையை துண்டுகளாக்கி சாலட்டில் சேர்த்து
சுவைக்கலாம். எலுமிச்சை ஜூஸ் புத்துணர்ச்சி அளிக்கும். இனிப்பு மற்றும் உப்பின்
சுவையில் பருகி மகிழலாம்.உடனடி புத்துணர்ச்சிக்கு எலுமிச்சை டீ செய்து
குடிக்கலாம். எலுமிச்சை ஊறுகாயின் சுவை அலாதியானது. நீண்டகாலம் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாதம் மதிய சித்ரான்னங்களில் முக்கிய இடம் பிடிக்கிறது. பல்வேறு உணவுத்
தயாரிப்பில் சுவை சேர்ப்ப தற்காக எலுமிச்சை சேர்க்கப்படுகிறது. மருந்து
தயாரிப்பிலும் பயன்படுகிறது.
ஆரோக்கியம் தரும் உணவுகள்
பாதாம் பால், குழந்தைகள் மற்றும்
கைக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்ககூடிய சிறந்த உணவாகும். பாதாம் பால்
தோல் நிறத்தை அதிகரிக்க செய்து முகத்திற்கு பொழிவை தருகிறது.. பாதாமை தொடர்ச்சியாக
சாப்பிடுவதன் மூலம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் மேம்படுவது மட்டுமல்லாமல்
தசைகளை வலுவடையச்செய்கிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பாதாம்
உதவுகிறது.
பேரீச்சம்பழம்:
பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து
தினமும் இளம்பெண்கள், வளரும்
குழந்தைகள், கர்ப்பிணி
பெண்கள் சாப்பிடவேண்டும். இது சிறந்த மருத்துவ பலன்களை கொண்டது. இரும்புசத்து
மற்றும் நார்சத்து அடங்கியுள்ள பேரீச்சம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கிறது. உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரிசெய்ய உதவுகின்றது..
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கொண்ட பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு
பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து பாலுடன் தேன் கலந்து ஒவ்வொரு நாளும்
சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்..
அக்ரூட் பருப்பு:
உடல் பருமனாக காணப்படுபவர்கள் உடலை குறைத்து
கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பினால் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது நல்லது.
இதை சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து கொள்ளலாம் மேலும் நீரிழிவு மற்றும் உயர்
இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அக்ரூட் பருப்புகள் மிக நல்லது. அக்ரூட் பருப்புகள்
ரத்த ஒட்டத்தை சீராக்கி மனஅழுத்தத்தை குறைக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
நிறைந்து காணப்படுகிறது.
உலர்திராட்சை:
இரும்புசத்து கொண்ட உலர்திராட்சை பழத்தை இரத்த சோகையால்
பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம். உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு எடை
குறைவாக இருந்தால் நாளும் 5 உலர்
திராட்சைகளையாவது சாப்பிடகொடுங்கள். பின்னர் உங்கள் குழந்தையின் எடை அதிகரிப்பதை
பார்க்கலாம். செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள்
உலர் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.
முந்திரி பருப்பு:
முந்திரி பருப்பு இயற்கையின் அதிசயம். இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார் புரதம், ஆகிய சத்துகளைகொண்டது.
முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது
முந்திரி பருப்பு
உடல் சூட்டைத் தணிக்கும் முருங்கைப்பூ
முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த
நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும். முருங்கை மரத்தின்
இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே
ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. கடுமையான வயிற்றுவலி
ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து
கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல்
அவிக்க வேண்டும்.
பின்னர் இதை பிழிந்து கொடுக்க வயிற்று வலி குணமாகும். நன்கு காய்ச்சிய பசுவின் பாலில்
நாலைந்து முருங்கைப் பூக்களைப் போட்டு நாள்தோறும்- சாப்பிட்டு வந்தால் தாது நல்ல
புஷ்டி பெறும். முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, பசு வெண்ணெய், ஆகியவற்றை சம அளவு
கலந்து சாப்பிட்டு வந்தால் மேகநோய் எனப்படும் பெண் சீக்கு குணமாகிவிடும்.
மேநோய்க்கு வேறொரு பக்குவமும் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவை
சாறெடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தச் சாற்றில் அரைக்கால் படி அளவு எடுத்து அதே அளவு
நல்லெண்ணெய் கூட்டி நூறு கிராம் அளவுக்கு வெல்லம் சேர்த்து மூன்று நாட்கள்
சாப்பிட்டாலே மேகநோய் தணிந்து விடும். உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ
நல்ல முறையில் பயன்படும். முருங்கைப்பூவை கஷாயம் முறையில் பக்குவம் செய்து
சாப்பிட்டால் உடல்சூடு உடனேயே சரிபடும். பெண்களுக்கு பெரும்பாடு என்னும்
உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிராபத்து
ஏற்படக்கூடும்.
இதற்கு முருங்கைப்பூ
பெரிதும் பயன்படுகிறது. முருங்கைப்பூவை நன்றாக அரைத்து ஒரு தேங்காய் அளவு
எடுத்துக்கொள்ள வேண்டும். பசுவின் பாலும் தேங்காய் பாலும் படிக்கு அரைப்படி
எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 25 கிராம் வெல்லத்தை
கூட்டி எல்லாவற்றையும் சேர்த்து காய்ச்சி இலேகிய பதத்தில் இறக்கிவிடவேண்டும். இந்த
லேகியத்தை எலுமிச்சை அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடவேண்டும்.
இவ்வாறு ஒரு வருடம் சாப்பிட்டால் பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு குணமாகிவிடும்வாழை இலையின் பயன்கள்
1. வாழை இலையில்
சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட
நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம்
ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின்
தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில்
பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை
உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க
வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து
பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு
தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி
கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு
வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில்
குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள்
பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது
விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான்
நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு
இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு
இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம்
நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது
சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு
அருந்துகின்றனர், அதை
மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது
ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின்
வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம்
உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில்
சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.
புடலங்காய் சாகுபடி - எளிது
புடலங்காய் சாகுபடி- Snake Gourd Cultivation
தமிழகத்தில் எளிதாக பயிராகும் காய் வகைகளில், கொடி வகைத் தாவரமான புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர். இது வேகமாக வளரக் கூடியதும், அதிக மகசூல் தரும் பயிராகும்.
மண், தட்ப வெட்ப நிலை:
புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.
பருவம்: ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.பருவம்: ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
நிலம் தயாரித்தல்:
நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும்.கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.
விதையளவு:
ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவு தேவைப்படும். விதையை 2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும்.
நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும்.கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.
விதையளவு:
ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவு தேவைப்படும். விதையை 2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும்.
உரமிடுதல்:
ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
நீர் பாய்ச்சுதல்:
சூட்டுடம்புக்கு ஏற்றது புடலங்காய்
புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு
ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது
எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால்
ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி
இவற்றை போக்கும்.
உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள்
அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு
பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண்
உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின்
பாதிப்புகள் குறையும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப்
போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை
அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.
ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக்
குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வையைத் தூண்டும். இதில்
நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம்
வெளியேற்றும்..
இத்தகைய சிறப்புத்
தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமேபசியைத் தூண்டி ருசியைக் கொடுக்கும் புதினா
புதினா கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி
உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது . வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது. தொடர்ந்து
எடுக்கும் விக்கல் நீங்கும் . மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம்
.தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் பூசலாம் .வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும்
இது சிறந்த மருந்தாகும் .
மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள்
செய்து தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது நீங்கும் .புதினா இலையை ஒரு தம்ளர் நீரில்
கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
புதினாவுடன் இஞ்சியையும் உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம் ,பித்தமும் அகலும்.
புதினாவுடன் இஞ்சியையும் உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம் ,பித்தமும் அகலும்.
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான
வைட்டமின்களும், தாதுப்பொருட்களும்
அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை
தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும்
இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான
எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த
அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம்
பார்த்து, அதை
வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.
புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு
கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக்
குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம்.
இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம்
வருதல், பல்
சொத்தை, பல்
அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப்
பற்பொடி நன்கு பயன்படும்.
புதினாவை துவையல்
செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட
நோய்கள், சிறுநீர் உபத்திரம்
நீங்கும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை
தவிர்த்தல் நல்லதுபேரீச்சம் பழத்தின் நன்மைகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி
சாப்பிடும் பழம். பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம்
உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல்
நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட
சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான்
கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.
மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை
தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா
சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும்
தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள்
குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை
ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள
காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக
இருக்கும். மேலும் கை, கால்
மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை
பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத்
தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. பார்வை குறைபாடை
போக்கி பார்க்கும் திறனை அதிகரிக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
இனிப்பு சுவையுள்ளதால் இந்த பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை அளிக்கும் பேரிட்சம் பழத்தை
தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். தூசு இல்லாத சுத்தமான பேரீச்சம்
பழத்தைதான் வாங்கி சாப்பிட வேண்டும்
Wednesday, June 1, 2016
அற்புத மூலிகை அறுகம்புல்
நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை
ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை
உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல்
சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி
அருந்தலாம்.
அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய
முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு
நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க
மருந்தாக உதவுகிறது..
அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக்
குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான
மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின்
அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக்
குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப்
போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.
உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட
மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான
மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது.
வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம்
கனிம உப்புக்கள் பலவும் உண்டு
காலையில் ஒரு
தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு
ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும்
உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.மிளகு
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில்
தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே
அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு
வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில்
விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.
உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது
சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள்
வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகு பிபெரசீயஸ் என்னும் தாவர வகையைச் சேர்ந்தது இதை
மசாலாப் பொருளாகவும் ஒரு வித மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். உணவு கெட்டு
விடாமல் இருப்பதற்காகவும் மிளகு பயன்படுத்துகின்றனர். மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும்
நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை
கொடுப்பதில் மிகச்சிறந்தது.
கருப்பு மிளகு பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய
நலன்கள் பற்றி பார்கலாம்...
வயிற்றுக்கு நல்லது:
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும்
ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது
சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும்
வயிற்று வலி, குடல்
எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு
உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.
தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப்
பார்காது.
வாழைப்பழம்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை
குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு
செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை
சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு
வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு
வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில்
சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்
சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல
மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான
கோஸ்டரீகா, மற்றும்
கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.
செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில்
கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து
காணப்படுகிறது.
உணவே மருந்து!
பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின்
பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில்
வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத
மாதவிலக்கும் சரி... இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு
இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9,
10 வயதுகளில்
பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப்
புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க
அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப் படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு
பார்க்கலாம்.
‘நீ இனி குழந்தை இல்லை.
குமரி...’ என்பதை
உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய
பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில்
அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள்
கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப்
போக்குவதுடன், அடுத்தடுத்து
அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க
வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.
பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு
சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது
முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை
மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான
உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது
கருப்பையில் பிரச்னைகள்... இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை
தவறும். ‘வரும்
போது வரட்டும்’ என
அலட்சியமாக விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும்
பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை
போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)







