Friday, June 3, 2016

முளைக்கட்டிய தானியங்கள்

முளைக்கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைப்பதையே முறை கட்டுதல் என்கிறோம். 

பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளைக்கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. 

தினை அரிசி

சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது. உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர். 

கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

தூதுவளை

தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு (கசப்பு), கார்ப்பு சுவையுடையது. தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை நீங்கும்.

இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.

இலையை அரைத்து அத்துடன் சம அளவு பசு வெண்ணெய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய்த் தோல் சேர்த்துக் கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யைத் தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட ஷயரோகம் குணமாகும்.

கரிசலாங்கண்ணி

இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

* தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

* மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 அல்லது - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

வல்லமை மிக்க வல்லாரை கீரை

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும். 

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

மணத்தக்காளி கீரை

கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத்தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க்கும். காய் முற்றினால் கத்தரிகாய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்:

1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத்தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு