கருத்துகேட்பு கூட்டத்திற்கு மாண்புமிகு வருவாய்த்துறை
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார். அ.இ.அ.தி.மு.க இராமநாதபுரம்
மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அவர்கள் வரவேற்று பேசினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மு.மணிகண்டன் அவர்கள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நி.சதன் பிரபாகர்
அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மறத்தமிழர் சேனை சார்பாக மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில
துணைப் பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார பாண்டியன், மாநில
இளைஞர் சேனை செயலாளர் சு.மணிகண்டன் தேவர், மதுரை
மாநகர் மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை
மாவட்ட தலைவர் ஆ.பாலமுருகன் தேவர், சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஸ்டான்லி
ராஜபாண்டியன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அரியூர் முத்துக்குமார் உள்ளிட்ட
பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நினைவுப் பரிசாக இராமநாதபுரம் அரண்மனை போன்ற வடிவமைப்பை மறத்தமிழர் சேனை சார்பாக வழங்கினர். மாநில அமைப்பாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கோரிக்கை மனுவை வழங்கினார்.