Friday, June 3, 2016

பழமை உணவு பாதுகாப்போம்

கம்பு உருண்டை, உளுத்தங்களி, கேப்பைக் களி போன்றவை புன்செய் தானியங்களால் செய்யப்படும் சில உணவுகள். கம்பங்கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினைமாவு போன்றவை முற்காலத்தில் தமிழர்களின் உணவுகளாக இருந்தன. ஆனால் தற்காலத்தில் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்களை சமைக்கும் பழக்கம் குன்றி விட்டது. புஞ்சை தானியங்களுக்கு பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. நெல் அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5 அல்லது 6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். நெல் அரிசியை பயன்படுத்தும் போது, அதில் உள்ள உயிர் சத்துக்கள் பலவிதங்களில் நீக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், சிறுதானியங்களை பயன்படுத்தும் போது அதில் உள்ள உயிர் சத்துக்கள் காக்கப்படுகிறது. சத்து நிறைந்த புன்செய் தானியங்கள் ஆறு மாதமான குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்தவை. இத்தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன. புன்செய் தானியங்களால் ஆன உணவு குளுகோஸை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.  

க்ளுட்டன் எனும் புரோட்டீன் மாவுச்சத்து இத்தானியங்களில் அறவே இல்லை. எனவே க்ளுட்டன் நிறைந்த நெல்லரிசி, கோதுமை போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும்போது உண்டாகும் களைப்பு, அசிடிட்டி, உடல்பருமன், புற்று நோய், வயிற்றுப்போக்கு போன்றவை புன்செய் தானிய உணவை உண்ணும்போது ஏற்படுவதில்லை. ராகி, கம்பு போன்ற தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இளைப்பைக் குறைக்க உதவுகின்றன. உணவுச் செரிமானம் எளிதில் நடைபெறுகிறது. 


ஒவ்வொரு 100 கிராம் தானியத்திலும் உள்ள சத்துகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
பயிர்/சத்துகள்புரதம் (கி)நார் (கி)தாது உப்புகள் (கி)இரும்பு (மி.கி)சுண்ணாம்பு (மி.கி)
கம்பு10.61.32.316.938
கேழ்வரகு7.33.62.73.9344
தினை12.383.32.831
பனிவரகு12.52.21.90.814
வரகு8.392.60.527
சாமை7.77.61.59.317
குதிரைவாலி11.210.14.415.211
நெல்லரிசி6.80.20.60.710
கோதுமை11.81.21.55.341
மதிய உணவுத் திட்ட சத்துணவை உண்மையிலேயே சத்தான உணவாக்க மத்திய அரசின் வேளாண் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் தங்களுடைய மதிய உணவுத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் அறிவுருத்தியுள்ளது.

Finger Millet, Kodo Millet, Proso Millet, Barnyard Millet, Little Millet, Great Millet or Sorghum, Italian Millet or Foxtail Millet, Pearl Millet, - செந்தினை - கருந்தினை - பைந்தினை - பெருந்தினை - சிறுதினை - பெருஞ்சாமை - செஞ்சாமை -  செஞ்சோளம் - கருஞ்சோளம் ( இருங்கு சோளம் ) - வெள்ளைச்சோளம்

No comments:

Post a Comment