Friday, June 3, 2016

முளைக்கட்டிய தானியங்கள்

முளைக்கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைப்பதையே முறை கட்டுதல் என்கிறோம். 

பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளைக்கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. 

மணற்புல் (Alfalfa), முள்ளங்கி, ப்ராக்கோலி, தீவனப்புல் (Clover) மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை முளைக்கட்டும் போது, அவற்றிலிருந்து கிடைக்கும் சில தாவர சத்துக்கள் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கின்றன. வேகமாக ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானிங்களால் மூப்படையும் வேகம் மட்டுப்படும் என்பதை நம்ப முடிகிறதா? இது உண்மை தான். 

முழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளைக்கட்டப்பட்ட தானியங்களே. பச்சைப் பருப்பு, பெங்கால் பருப்பு, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், காய வைத்த பட்டாணிகள் ஆகியவை நாடு முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய தானிய வகைகள் தான்.  பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பாரம்பரிய முறையில் முளைக்கட்டப்பட்ட தானியங்களை பயன்படுத்தியும் வருகிறோம். மணற்புல் விதைகளில் முளைக்கட்டப்படும் போது, அவை மாங்கனீசு, வைட்டமின்களான ஏ, பி, சி, ஈ, கே மற்றும் பிற முக்கியமான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து தருகின்றன. 

இங்கு அத்தகைய முளைக்கட்டிய தானியங்களின் அற்புதமான சில ஆரோக்கிய பலன்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment